1975 - எமர்ஜென்ஸி - நெருக்கடி நிலைப் பிரகடனம் 1975 - Emerg

About The Book

இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு 48 ஆண்டுகளாகிவிட்டன. இன்று ஜனநாயகம் சர்வாதிகாரம் பாசிசம் போன்ற சொற்கள் அர்த்தம் புரியாமலேயே அன்றாடம் புழங்கும் சொற்களாகிவிட்டன. ஆனால் இம்மூன்றின் உண்மையான பரிமாணத்தையும் ஒரே சமயத்தில் மக்கள் உணர்ந்த தருணம் அது. நெருக்கடி நிலை அறிவிப்புக்கு முன்னும் அதுபோன்ற நாள் வந்ததில்லை. அதற்குப் பின்னும் வரவில்லை. வரப்போவதுமில்லை. இந்திராகாந்தியின் எழுச்சி வீழ்ச்சி மீண்டும் அவரது எழுச்சி என்ற மூன்று பிரிவுகளில் நெருக்கடி நிலை அடங்குகிறது. எதனால் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது அதனை அறிவிக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது நெருக்கடி நிலையின் தாக்கங்கள் என்ன அதனால் நாட்டின் அரசியலும் மக்களின் வாழ்வும் எத்தகைய விளைவுகளை எதிர்கொண்டன அதன் எதிர்விளைவுகள் என்ன என இவை அனைத்தையும் விரிவான கண்ணோட்டத்தில் இப்புத்தகம் அலசுகிறது. நெருக்கடி நிலைக் காலத்தை 'அரசுக் கொடுங்கோன்மை' என்று விமர்சனம் செய்தவர்களும் உண்டு. 'தறிகெட்ட சுதந்திரத்திற்குப் போடப்பட்ட கடிவாளம்' என்று சொன்னவர்களும் உண்டு. எமர்ஜென்ஸியை முழுமையாக ஆதரிக்கவும் செய்யாமல் கண்மூடித்தனமாக எதிர்க்கவும் செய்யாமல் எந்தச் சூழ்நிலையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது அதற்கு முன்பாக நடந்த சம்பவங்கள் யாவை நெருக்கடி நிலையை அறிவித்தவர்களும் அதனால் பாதிக்கப்பட்டவர்களும் என்ன செய்தனர் என வரலாற்றை உள்ளது உள்ளபடி திரும்பிப் பார்க்கும் முயற்சியே இது.
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
downArrow

Details


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE