கணையாழியில் தொடராக வந்த கதை. பொருத்தமில்லாதவருடன் மணவாழ்க்கையில் இணையும் ஒரு பெண் பின்னர் தனக்கு உகந்தவனைக் கண்டுபிடிக்கிறாள். ஆச்சரியமூட்டும் வகையில் அவர்கள் நட்பு மனம் சார்ந்ததாக மட்டுமே இருக்கிறது. ஆனாலும் அவர்கள் வாழ்வில் இதனால் ஏற்படும் விளைவுகளால் பரபரப்புக்கும் விறுவிறுப்பும் குறைவில்லை.+சுஜாதாவின் முதல் நாவல். 1960களில் குமுதத்தில் வெளிவந்தது. அதிரடியான எழுத்து நடை அக்காலத்திய பாணியில் இருந்து முற்றிலுமாக விலகிய வித்தியாசமான கதை சொல்லும் விதம் கணேஷ் கேரக்டர் முதல் முதல் அறிமுகமானது என்று இந்த நைலான் கயிறுக்கு பல சிறப்புகள். இப்போதும் அதே உற்சாகத்துடன் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது இந்த நாவல்.