50 நாட்களில் உங்கள் வாழ்க்கை மாறக்கூடும். எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரே வேதபாட உபகரணமான இது உலகெங்கும் உள்ள புதிய கிறிஸ்தவர்கள் வாழ்நாள் முழுவதும் சீஷத்துவத்தில் இருக்க அத்தியாவசியமானவற்றைக் கொண்டுள்ளது (மேற்கத்திய உதாரணங்கள் இதில் இல்லை). தேவனுடைய கதையையும் அதில் உங்கள் பங்கையும் தெளிவாக அறிந்துகொள்ளாமல் தேவனோடு நெருங்கிய ஐக்கியம் கொள்வதும் உங்கள் நோக்கத்தை நிறைவேற்றுவதும் கடினம்.

இந்த 50 தின வாசிப்புப் பகுதிகள் இயேசுவுடனான உங்கள் நட்புறவை ஆழமாக்கவும் அவருடைய சீஷராக இருப்பதற்கான நடைமுறைத் திறமைகளை உங்களுக்குக் கொடுக்கவும் உதவும் வாழ்நாள் முழுவதற்கும் தேவையான விசுவாச அத்தியாவசியங்களைக் கொண்டுள்ளன.

இந்த எளிய ஆனால் வாழ்க்கை மாற்றும் பயணத்தின் மூலம் முதிர்ந்த விசுவாசிகள் பல ஆண்டுகளாக அறிந்தவற்றை 50 நாட்களில் கற்றுக்கொள்ளுங்கள்.

வாரம் 1: தேவனுடைய கதை – வேதாகமம் முழுதும் நிறைந்துள்ள கதையைக் கண்டறிதல்

வாரம் 2: உங்கள் கதை – கிறிஸ்துவுக்குல் உங்கள் புதிய அடையாளத்தைப் பற்றிக்கொள்ளுதல்

வாரம் 3: உங்கள் நோக்கம் – உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவேற்றுதல்

வாரம் 4: நிலைத்திருத்தல் – தேவனுடன் இணைந்திருத்தல்

வாரம் 5: தேவனுடைய வார்த்தை – வாழ்க்கையை உருவாக்கியவருக்குச் செவிகொடுத்தல்

வாரம் 6: ஜெபம் – வாழ்க்கையை உருவாக்கியவருடன் பேசுதல்

வாரம் 7: பரிசுத்த ஆவி – தேவனுடைய பலத்தினால் உங்கள் கதையில் வாழுதல்

ஒவ்வொரு வாரமும் வேதாகமம் முழுவதும் பின்னிப் பிணைந்திருக்கும் சம்பவங்களை அதிகமதிகமாகக் கற்றுக்கொள்வீர்கள்.

எப்படிக் கிறிஸ்துவில் நிலைத்திருப்பது சந்தேகங்களைத் தீர்ப்பது சோதனையை எதிர்த்து நிற்பது மற்றும் பாடுகளின் காலத்திலும் தேவனை ஆராதிப்பது என்பது போன்ற கிறிஸ்தவ வாழ்க்கையின் இரகசியங்களை அறிந்துகொள்வீர்கள்.

வேதாகமத்தைப் படிப்பது உங்கள் விசுவாசத்தைப் பகிர்ந்து கொள்வது சீஷராக்குவது மற்றும் ஜெபிப்பதற்கான நடைமுறை வழிகளையும் கற்றுக்கொள்வீர்கள்.

வேதவசனங்கள் கேள்விகள் ஜெபம் மற்றும் அடுத்த படிகளை அறிந்துகொள்வதற்கான இடம் ஆகியவற்றைப் பயன்படுத்தி பிரதான கட்டளை அணுகுமுறையோடு ஒவ்வொரு நாள் பாடமும் நிறைவடைகிறது.

நீங்கள் இப்படிப்பட்டவராக இருந்தால் இந்தப் புத்தகம் உங்களுக்குரியது:

- விசுவாசத்தில் வளர அடுத்தப் படிகளை எடுத்து வைக்க நாடுகிற புதிய விசுவாசி

- சீஷராக அல்லது சீஷராக்க நாடும் கிறிஸ்தவர்

- கிறிஸ்தவத்தை ஆய்வு செய்து இயேசுவின் சீஷராக மாறுவது எப்படி என்று அறிய முற்படுபவர்

வாசகர்கள் கருத்து

“வாழ்க்கை மாற்றும் ஒரு பயணம்.” ஸ்காட் ரே ஐஎம்பி

“நான் வாசித்த சிறந்த சீஷத்துவப் புத்தகங்களில் ஒன்று.” க்றிஸ் ப்ரைஸ் செட்ஸ் நொகாட்டி போதகர்

“இது உங்களை உற்சாகப்படுத்தும் என்றறிவேன்.” Dr. ரிச்சர்ட் ப்ளாக்கபி எக்ஸ்பீரியன்சிங் காட் புத்தகத்தின் இணை ஆசிரியர்

“புதிய கிறிஸ்தவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் என்றாலும் அதிக முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவர்களுக்கும் சவாலாக இருக்கிறது.” மேக் ஹெவனர் ட்ரினிட்டி பேப்டிஸ்ட் காலேஜ்

“விவரமான விளங்கிக்கொள்ள எளிதான இறையியல் கருத்துக்கள் செறிந்த சீஷத்துவ உபகரணம்.” கெல்லி ஹேச்டிங்ஸ் பெண்கள் ஊழியர்

“சுவிசேஷ சீஷத்துவம் மற்றும் சீஷராக்குவதற்கான பணித்தளக் கையேட்டை ஒன்றாகக் கொண்டுள்ளது.” பாப் பம்கார்னர் தலைமை நற்செய்திப்பணி திட்டச்செயலாளர்

“உங்கள் ஆவிக்குரிய பயணத்தின் பல கேள்விகளுக்கு விடை காணும் ஆழமான ஆய்வு இது.” பெட்சாய்தா வார்கஸ் சமாரிட்டானா டெல் போஸோ நிறுவனர்

உங்கள் வாழ்க்கை சொல்லும் புதிய கதை உண்டு:

உங்கள் வாழ்க்கை மாற புனிதமான சத்தியங்களைப் பிரயோகித்து உண்மையான விசுவாசத்தையும் சந்தோஷத்தையும் அனுபவித்து மகிழுங்கள். இயேசுவைச் சந்திப்பது ஒரு ஆரம்பம் மட்டுமே. அவரைப் பின்பற்றுவதன் மூலம் – உங்கள் உண்மைக் கதை தெரிய வரும்.

Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.