*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
About The Book
Description
Author
ஆழ்ந்த தன்வயமற்ற நிலையொன்றை விளைவிக்கும் உத்தியைக் கண்டு கொள்வது உள்ளடக்கத்தின் அந்த தரிசனத்திற்கான நுண்ணிய கணிப்பு என்றே பொருள். இளங்கோ கிருஷ்ணனின் நுண் கதைகள் எல்லோரும் கருதுவதுபோல அதன் அளவைப் பொருத்ததல்ல. இலக்கியப் படைப்பு வகைமைகள் ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் ஓர் எல்லையைக் கொண்டிருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அத்தகைய எல்லைகளை மறு நிர்ணயம் செய்ய வைக்கும் செயல்போக்கு வழக்கமான ''மன உருவாக்கங்கள்'' என்றைக்குமான மனித ''கனிந்த நிலையாகத்தான்'' இருக்கக்கூடும். மிக விரிவான வாசிப்பனுபவமும் தகவல் செறிவும் தனிமனித சூழ்நிலை அமைப்பை புதிய கோலங்களாக மாற்றிக் கொள்ளும் இளங்கோ கிருஷ்ணனின் படைப்பு தூண்டல்தான் இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒன்று மேலும் இடையறாத மனித இருத்தலின் நம்பிக்கைக்கான எதிர்நிலையாகவும் இருந்து அவ்விருத்தலை வலுவாக்கவும் செய்கின்றன இக்கதைகள். சாகிப் கிரான்