*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹171
₹200
14% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
வந்தேறிகள் பூர்வகுடிகள் என்றெல்லாம் மக்களைப் பிரித்துப் பார்ப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. அந்த அடிப்படையில் இந்த மண்ணில் பல காலமாக வாழ்ந்து வரும் யாரையும் ஒதுக்குவதிலோ இரண்டாம்தரக் குடிமக்களாக அணுகுவதிலோ நமக்கு உடன்பாடில்லை. சொந்தச் சகோதரர்கள் என மகாகவி பாரதி சொன்னது போல இந்த மண்ணில் காலம் காலமாக வாழ்ந்துவரும் எல்லோரும் சொந்தச் சகோதரர்கள்தான். அவர்கள் யாரும் துன்பத்தில் சோர்வதை ஏற்காமையைக் கடைப்பிடிப்பவர்கள் நாம். மத அடிப்படையிலோ மொழி அடிப்படையிலோ சாதி அடிப்படையிலோ இனவாதம் பேசுகிற ஒருசாராரின் குடியுரிமைக்கு உலை வைக்கிற குடியுரிமை இல்லை எனக் கூறி ஒரு சாரரை வதை முகாம்களுக்கு அனுப்புகிற கொடும் அரசியலை நாம் எப்படி ஏற்பது? இப்படி ஒருசாரரின் குடியுரிமையை மறுப்பவர்கள் இன்னொரு பக்கம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கொஞ்சம் கொஞ்சமாக இங்கே இடம் பெயர்ந்து வந்த மற்றொரு சாரரை ஆட்சி அதிகாரங்களின் துணையோடு இப்படிப் பூர்வகுடிகள் என நிறுவுவதற்காக வரலாற்றை மாற்றி அமைப்பதை எப்படி நாம் ஏற்பது. அப்படி வரலாற்றை மாற்றி அமைப்பதற்காக அவர்கள் அறிவியலின் பெயரால் அபத்தங்களைச் செய்வதும் பொய்களைப் புனைவதையும் எப்படிச் சகிப்பது?