இந்த நாவலை ஆக்கிய திரு. நா. பாரத்தசாரதி அவர்கள் ஒரு முற்போக்கு எழுத்தாள் மட்டுமல்ல. அவர் ஒரு பத்திரிகையாளரும் (''தீபம்'' இதழின் ஆசிரியர்) நாவலாசிரியுமாவார். இது ஒரு காந்திய சகாப்த்த நாவல். ஆனால் ஒன்றல்ல. இரண்டு சகாப்தங்களை நீங்கள் இந்த நாவலில் சந்திக்கிறீர்கள். ஒரு தலைமுறையின் தேசபக்தர்கள் அனைவருமே இந்த நாவலின் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். உப்புச் சத்தியாக்கிரகத்திலிருந்து நேற்று வரை உள்ள நிலைமைகளினூடே இந்தக் கதை பாய்கிறது. வளர்கிறது நிறைகிறது இந்தக் கதை நடந்த காலத்து உண்மைத் தேசபக்கத்கள் இன்னமும் நம்மிடையே இருக்கின்றனர். இதில் வரும் கற்பனைப் பாத்திரங்களை அறியவும் உணரவும் அந்த உண்மைத் தேசபக்தர்கள்தான் நமக்கு உரைகள். இந்த அடிப்படையில்தான் இந்த நாவல் அமைந்துள்ளது.
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.