*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹246
₹280
12% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
ஹஸன் அஸிஸுல் ஹக் சமகால வங்கதேச மக்களின் வாழ்க்கையில் ஒரு சக்திவாய்ந்த சமூகப் பிரக்ஞையை நிகழ்த்தும் கதைகளை எழுதுபவர் - ஆனால் இந்தக் கதைகள் வழக்கமான யதார்த்தப் புனைவுகளின் வரம்புக்குள் வியப்பூட்டும் திருப்புமுனைகளையும் கொண்டிருப்பவை. ஆவியின் வாதை எனும் இத்தொகுப்பில் பரந்த உள்ளீடுகளும் அணுகுமுறைகளும் நிறைந்த அவரது படைப்புலகத்திலிருந்து பன்னிரண்டு கதைகள் இருக்கின்றன. ஒரு கதையில் தன் மனைவி மகனைத் தேடி ஊர் திரும்பும் ஒரு மனிதன் போருக்குப்பின் அவர்களைக் கண்டடையும் முறை நாம் எதிர்பாராததாகவும் அதே நேரத்தில் நாம் எதிர்பார்த்ததாகவும் இருக்கிறது. இன்னொரு கதையில் ஒரு மந்திரவாதி தன் மூன்று மகன்களில் யாரிடமும் தன் ரகசியங்களைத் தெரிவிக்காமல் மரித்துப்போகிறார் - அதன் பிறகு வினோதமான மரணங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. மதியம் முழுக்க எனும் மிக எளிய கதையில் ஒரு சிறுவன் தன் தாத்தாவின் மரணத்துக்காகக் காத்திருக்கிறான். எல்லாக் கதைகளிலுமே வங்கச் சமூகத்தின் பின்தங்கிய மக்களின் வாழ்க்கை அச்சமூட்டும் வகையில் விரித்துரைக்கப்படுகிறது. ஹஸன் அஸிஸுல் ஹக் இருபத்து நான்குக்கும் கூடுதலான புத்தகங்களை எழுதியிருக்கிறார். மேலும் பங்களா அகாதமி விருது மற்றும் ஆனந்த புரஸ்கார் உள்ளிட்ட வங்காள எழுத்துலகின் மதிப்புமிக்க பல விருதுகளை வென்றிருக்கிறார். *** எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான பாஸ்கர் சட்டோபத்யாய இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். Anthology 14: Stories That Inspired Satyajit Ray ஸ்ரீஷெந்து முகோபாத்யாயவின் No Childs Play மற்றும் The House by the Lake ஆகியவையும் இவரது மொழிபெயர்ப்புகள். இவரது சொந்தப் படைப்புகள் Penumbra Patang ஆகிய நாவல்கள். இந்தியாவின் பெங்களூருவில் வசித்து பணியாற்றி வருகிறார்.