*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹152
₹170
10% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
அறிவியல் தொடர்பான விஷயங்களை எளிய நடையில் யாரையும் பயமுறுத்தாமல் விளக்கமாக எடுத்துச் சொல்கிற புத்தகங்கள் தமிழில் மிகவும் குறைவு. அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் கிழக்கு பதிப்பகத்திலிருந்து நிறைய அறிவியல் தமிழ் நூல்கள் வெளிவரவிருக்கின்றன. அந்த வரிசையில் முதன்முதலாஇப்போது வெளி வந்திருக்கிறது மின்சாரம் பற்றிய இந்தப் புத்தகம். நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்ட எத்தனையோ விஷயங்களில் ஒன்று மின்சாரம். ஆனால் அது பற்றி நமக்குத் தெரிகிற தகவல்களோ மிக மிக சொற்பம்தான்.காற்றைப் போல நீரைப் போல மின்சாரமும் மிக எளிதில் நமக்கு கிடைத்து விடுவதால்அதன் முக்கியத்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமலே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறோம். விளைவு ஆக்கவும் அழிக்கவும் முடியாத அந்த சக்தியை அநியாயத்துக்கு வீணடித்துக் கொண்டிருக்கிறோம். மின்சாரம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் விலாவாரியாக எடுத்துச் சொல்லும் இந்தப் புத்தகம்உங்கள் புத்தக அலமாரியில் கட்டாயம் இருந்தாக வேண்டிய ஒன்று. இந்தப் புத்தகத்தை எழுதிய சுந்தரம் மின்சாரத் துறையில் பல ஆண்டு காலம் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வாழ்நாள் முழுக்க சேகரித்த விஷயங்களை சின்னச் சின்ன உதாரணங்களோடு சொல்லி இருக்கிறார்.