நூலாசிரியர் மைக்கேல் கிரைட்டன் சயன்ஸ் பிக்ஷன் கதைகளில் பிரபலமானவர். உலகப்புகழ் பெற்ற ஜுராசிக் பார்க் அவருடைய கதைதான். அவர் எழுதிய ‘தி டெர்மினல் மேன்’ கதையைத் தமிழில் எளிமையாக அழகாக மொழிபெயர்த்துள்ளார் ரா.கி.ர. நிறைய விஞ்ஞான விஷயங்கள் அடங்கிய ஒரு த்ரில்லரை தமிழிலேயே எழுதப்பட்ட கதையைப் படிப்பது போன்ற உணர்வைத் தருவதில் வெற்றி பெறுகிறது. மொழிபெயர்ப்பு. படித்துப் பாருங்கள் மேற்சொன்ன ஒவ்வொரு வரியும் உண்மை என உணர்வீர்கள்.