*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹400
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
செய்தித்தாள்களும் புலனாய்வுப் பத்திரிகைகளும் புத்தகங்களும் வெளிப்படுத்தும் பிம்பங்களை மட்டும் வைத்துக்கொண்டு அல் காயிதா போன்ற ஒரு மாபெரும் இயக்கத்தைப் புரிந்துகொள்ளமுடியாது.நவீன பாகிஸ்தானையும் ஆப்கனிஸ்தானையும் அமெரிக்காவையும் அல் காயிதா மற்றும் தாலிபனின் ஊடாகப் புரிந்துகொள்ள முயலும்போது பல புதிய தரிசனங்கள் கிடைக்கின்றன. உலகை அச்சுறுத்தும் இரு பெரும் பயங்கரவாத அமைப்புகளாக சர்வதேச ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் இந்த இரு அமைப்புகளின் ஆழத்தை எக்ஸ்ரே கதிர்களைப்போல் ஊடுருவிப் பார்க்கிறது இந்தப் புத்தகம்.புத்தகங்களின் துணைகொண்டு எழுதப்பட்ட மற்றொரு புத்தகமாக அல்லாமல் அல் காயிதா இயக்கத்தினர் தாலிபன் இயக்கத்தினர் ராணுவ உளவு நிறுவன அதிகாரிகள் ஆகியோருடன் நேரடியாக உரையாடி விரிவான கள ஆய்வுகள் செய்து எழுதப்பட்டுள்ள நூல் இது.மிகுந்த அனுசரணையுடன் ஆப்கனிஸ்தானில் நுழைந்து பாகிஸ்தானின் ஆதரவைப் பெற்று அல்காயிதா நடத்திய தாக்குதல்கள் ஆதாரபூர்வமாகப் பதிவாகியுள்ளன. இயக்கத் தலைவர்கள் குறித்தும் தளபதிகள் குறித்தும் இதுவரை வெளிவராத பல தகவல்களும் உள்ளன. மொத்தத்தில் சமகால சர்வதேச அரசியல் வரலாறு குறித்தும் பயங்கரவாதத்தின் வலைப்பின்னல் குறித்தும் ஒரு மேம்பட்ட சித்திரத்தை இந்தப் புத்தகம் அளிக்கிறது.