அற்புதங்களும் அவலங்களும் ஒன்றாகக் காட்சியளிக்கும் ராமேஸ்வரத்தில் நிகழ்கிறது கதை. பெரிய அளவில் கல்வியோ தொழில் வாய்ப்புகளோ இல்லாத இத்தீவில் மக்களின் பொருளாதாரம் கோயிலையும் கடலையும் மட்டுமே சார்ந்துள்ளது. ஆகவே மீன்களும் மந்திரங்களும் மட்டுமே அங்க விலைபோகும் சரக்குகள்.இலங்கையில் யுத்தம் தீவிரமடைந்த காலத்தில் ராமேஸ்வரத்தில் அகதிகள் வரத்து அதிகரித்தது. ஒரு மாபெரும் துயரத்துக்கு மிக நெருக்கத்தில் இருந்தும் தன் இயல்பில் தடம் புரளாத தீவாக அது இருந்தது. தொன்மங்களின் வசீகரத்தை இருப்பியல் பிடுங்கித் தின்னும் பேரவலம் யுத்த பாதிப்பினும் கோரமாக நிகழ்ந்துகொண்டிருந்தது.அடையாளச் சிக்கல் அங்கு வந்து சேர்ந்த அகதிகளுக்கு மட்டுமல்ல; அங்கேயே வசிப்பவர்களுக்கும்தான். ஒரு பெரும் அவல சரித்திரத்தின் சாட்சியாக நின்றவர்கள் ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தவும் அவகாசமின்றிப் பிழைப்புக்கான பேயோட்டத்தில் கரைந்து காணாமல் போகிற வரலாற்றைப் பேசுகிறது இந்நாவல்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.