அண்ணா அவர்களே தனது வாழ்க்கை வரலாற்றை எழுதுவதைப் போல இந்த நூல் அமைந்துள்ளது. அவரது எழுத்துக்களும் பேச்சுக்களும் பெருமளவுக்கு அப்படியே இடம்பெற்றிருப்பதால் அண்ணா அவர்களே தொடர்ந்து எழுதியதைப் போல படிப்பவர்களுக்கும் தோன்றும் விதத்திலே தம்பி பரிமளம் இந்நூலினை சிறப்பாக தொகுத்திருப்பது பாராட்டுதற்குரியச் செயலாகும். - கலைஞர். மு.கருணாநிதி.