‘பௌத்தம் ஒரு மதமல்ல, ஓர் அரசியல் சிந்தனை. புத்தர் ஓர் அரசியல் சிந்தனையாளர்; உலகின் பல சிந்தனையாளர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் முன்னோடியாக விளங்குகிறார்’ -காஞ்ச அய்லய்யா இன்றைய நவீன உலகம் அறிந்திருக்கும் பாராளுமன்ற நடைமுறை விதிகளைப் பௌத்தச் சங்கங்கள் அன்றே அறிந்திருந்தன; அவற்றைப் பின்பற்றவும் செய்தன. இருக்கைகள் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதற்கும் விதிகள் இருந்தன; தீர்மானங்கள் கொண்டுவருவது குறித்தும், தீர்மானங்கள் குறித்தும், குறைவெண் வரம்பு, கொறடா, வாக்குகள் எண்ணுதல், வாக்குச் சீட்டுகள் மூலம் வாக்களித்தல், ஒருவர்மீது கண்டன தீர்மானம் கொண்டுவருதல், ஒழுங்குமுறைப்படுத்துதல், தீர்ப்பு வழங்குதல் போன்ற அனைத்திற்கும் விதிகள் இருந்தன. …எனினும், ஒருவரது பொருளாதார, சமுதாய, அரசியல் சுதந்திரத்தின் நடைமுறைச் செயல்பாட்டில்தான் பௌத்தத்தின் சாரம் இருக்கிறது. ஜனநாயகத்தின் வழிகாட்டியாகப் புத்தர் இருந்தார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் குறித்து தீவிரமாக அவர் பேசினார்’ -அம்பேத்கர், அரசியல் நிர்ணய சபை உரையில்.