தினை சாமை கம்பு வரகு போன்ற சிறுதானியங்கள்தான் ஒரு காலத்தில் தமிழர்களின் உணவாகத் திகழ்ந்தன. நம் முன்னோர்கள் எல்லாம் தெம்பும் திடகாத்திரமுமாக நோய் நொடி அண்டாமல் வாழ்ந்தார்கள் என்றால் அவர்களது வாழ்க்கை முறையில் இடம் பெற்ற சிறுதானிய உணவு முறைகளும் அதற்கு ஒரு காரணம். ஆனால் காலப்போக்கில் இந்த உணவுப் பழக்கம் அலட்சியப்படுத்தப்பட்டது. அதற்குப் பதில் புதுப் புது உணவு வகைகள் மூலைக்கு மூலை ஹோட்டல்கள் பிட்சா பேக்கரி ஐட்டங்கள் என்று கண்டதையும் ஆசை ஆசையாகச் சாப்பிட்டு கொழுப்பு ரத்தக் கொதிப்பு சர்க்கரை நோய் இதய நோய் என்று பல்வேறு நோய்களுக்கு ஆளான பிறகு இப்போது ஞானோதயம் பிறந்திருக்கிறது. நமது உடலைப் பாதுகாக்க சிறுதானிய உணவுமுறைதான் ஒரே வழி என்கிற உண.