சா. கந்தசாமியின் நாவல்களில் உளவியலுக்கு முக்கியத்துவம் தரும் நாவல் ‘அவன் ஆனது’. எதிரில் உட்கார்ந்திருப்பவரிடம் பேசும் தொனியில் காலத்தில் முன்னும் பின்னுமாய் நகர்ந்துசெல்லும் கதையாடல் இதன் தனித்த அம்சம். 1981இல் வெளிவந்த இந்த நாவல் பொதுவாக அன்றைய நாவல்களில் காணப்படும் தொடக்கம் மையப் பிரச்சினை முடிவு என்பனபோன்ற சம்பிரதாயமான கட்டமைப்பைத் தவிர்க்கிறது. சொல்லப்படும் கதை ஒரு தளத்தில் முன்னகர சொல்லப்படாத இன்னொரு கதையும் இணைச்சரடாக ஓடுகிறது. வெளிவந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின் வாசிக்கும்போதும் புதிதாகவே இருப்பது இதன் வலிமை.
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.