ஏப்ரல் ஒன்றாம் தேதியன்று தன் எதிரியைப் பழிவாங்க விளையாட்டாய் ஒரு திருமண அழைப்பிதழை அச்சடித்துப் பலருக்கு அனுப்புகிறான் ஒருவன். அதனால் விபரீதம் நேர்ந்து ஓர் உயிர் போய் விடுகிறது. இறந்தவனின் அண்ணன் ஆவேசமாக அவருக்காகத் துப்பறியும் கார் டிரைவர் கௌரி(சங்கரை)யை அந்த விசாரணை எங்கெங்கோ கொண்டு விடுகிறது. பல ஆபத்துகளில் சிக்க வைக்கிறது. அமைதியின் சின்னமான புத்தரின் ஆசிரமப் போர்வையில் நடக்கும் மிகப்பெரும் குற்றமும் வெளியாகிறது. அதற்குள்தான் எத்தனையெத்தனை சம்பவங்கள்! கீழே வைக்க விடாமல் படிக்க வைக்கிற அற்புதமான துப்பறியும் கதை இது.