இந்த ஒற்றை வார்த்தையின் முழு அர்த்தத்தையும் சொல்வதற்கான சாத்தியப்பட்ச் சொல்லாடல்களை அறிய முற்பட்டபோது அதன் அர்த்தங்கள் மேலும் விரிந்து நீண்ட நெடிய சொற்றொடர்களாக வந்து சேர்ந்தன. ‘வாழ்க்கையின் ரசங்கள்’ ‘வார்த்தைகளுக்குள் அடங்காத உலகம்’ என அதன் மையப்பொருள் நோக்கிய புரிதலுக்குப் பிரயோகிக்கப்படும் தகவமைவுகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஆறு கண்டங்கள் 24 நாடுகள் என உலகம் முழுவதும் சுற்றிச் சுழன்று எடுக்கப்பட்டிருக்கிறது இப்படம். 96 நிமிடங்கள் என்றாலும் கடந்த தொலைவுகளம் எல்லைகளும் பிரமிக்க வைப்பது. உலகத்தைச் சுற்றி வந்த உணர்வை ஏற்படுத்தும் படம் என்றும் சொல்லலாம். ஆனால் வெறும் பயண அனுபவப் பகிர்வோ காட்சியியல் தொடர்பான பதிவோ அன்றி மனதின் தேடல்நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். வசனங்கள் இல்லாமல் படத்தோடு உணர்வு கொப்பளிக்க இழையோடும் இசையின் பங்கும் அலாதியானது. பராக்காவின் உள்ளடக்கம் வரையறுக்கப்படாத ஒற்றைவரியில் கதைசொல்லிச் செல்லும் போக்கற்றது. கதாபாத்திரங்கள் அற்றது. வசனங்களோ? பின்புலக்குரலோ (Voice Over) ஏதுமில்லை. ‘பராக்கா’ என்ற ஜப்பானிய சொல்லுக்கு ‘வாழ்க்கையின் ரசங்கள்’ என்று அர்த்தம். நாடு மொழி இனம் மதம் என கோடு கிழிக்கப்பட்ட சமூகக் கட்டமைப்பைத் தகர்த்து மனித வாழ்க்கையின் கூறு எதுவோ அதனை உண்மைநிலை என்ற நோக்கில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் உருவாக்கப்பட்டிருக்கிறது இப்படம். இங்கே புரிந்து கொள்ளப்படுதலே தேவையாயிருக்கிறது. வார்த்தைகளால் விளக்கிச் சொல்ல ஒருகோடி வார்த்தைகளும் போதாத அமைவில் இப்படம் பார்ப்பவர்கள் இதனை ஒருபோதும் ஒதுக்கிவிட முடியாது என்பது திண்ணம்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.