விவேக் கோகுல்நாத்துடன் துப்பறியும் பரபர விறுவிறு த்ரில்லர். பம்பாய்க்கு போகும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி அழைப்பு மூலம் மிரட்டல் ஒன்று விமான நிலையத்திற்கு வருகிறது. அதை அலட்சியப்படுத்திவிட்டு அந்த விமானத்தை பறக்க அனுமதிக்கின்றனர் விமான நிலைய அதிகாரிகள். அதற்குப் பிறகு நடக்கும் விபரீதங்கள் க்ரைம் கதை மன்னரின் எழுத்து நடையில் பக்கத்திற்கு பக்கம் நம்மை பதற வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.