*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹340
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
எதையும் எளிதாகப் புரிந்துகொள்ளும்படியும் வெகுவாக ரசிக்கும்படியும் சொல்வது சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் இயல்பு. கனமான ஆழமான பிசினஸ் மேனேஜ்மெண்ட் பாடங்கள்கூட இவர் கை பட்டால் புதுப் பொலிவு பெற்றுவிடுகிறது. நீங்கள் ஏற்கெனவே தொழிலொன்றை நடத்திவந்தாலும் சரி ஒரு தொழில்முனைவோராக மாறும் கனவோடு இருப்பவராக இருந்தாலும் சரி... இந்தப் புத்தகம் உங்களுக்குத் தேவையான பயனுள்ள டிப்ஸ்கள் அனைத்தையும் கையடக்கமாகத் தொகுத்து அளிக்கிறது. திறமைசாலியான ஓர் ஆலோசகரை அதிக வருமானம் கொடுத்து பணியில் அமர்த்திக்கொள்வதற்குப் பதில் இந்தப் புத்தகத்தை வாங்கி வைத்துக்கொண்டால் போதும். வளமான வாழ்வும் லாபகமான வர்த்தகமும் கைமேல் கிடைக்கும்.+விற்பனைத் துறையில் பெரும் சாதனைகள் புரிய ஓர் எளிமையான சுவாரஸ்யமான கையேடு!· விற்பனைத் துறை எப்படிச் செயல்படுகிறது? அதில் இணைவது எப்படி?· இத்துறையில் என்னென்ன சிக்கல்கள் சவால்கள் வாய்ப்புகள் உள்ளன? அவற்றை எப்படிக் கையாள்வது?· உங்கள் மேலாளரின் நம்பிக்கையைப் பெறுவது எப்படி? எந்தவொரு குழுவிலும் சிக்கலின்றி பணியாற்றுவது எப்படி?· பேச்சு எழுத்துத் திறனை வளர்த்துக்கொள்வது எப்படி?· வாடிக்கையாளரைப் புரிந்துகொள்வது எப்படி? அவருடைய தேவைகளை உணர்ந்து பூர்த்தி செய்வது எப்படி?· பேரங்களை வெற்றிகரமாக நடத்திமுடிக்கும் கலையை எப்படிக் கற்றுக்கொள்வது?· இலக்குகளை அடைவது எப்படி? நெருக்கடிகளைச் சமாளிப்பது எப்படி?நீங்கள் விற்பனைத் துறையைச் சேர்ந்தவராக இருந்தால் அல்லது அதில் நுழையும் கனவு கொண்டிருப்பவராக இருந்தால் இந்தப் புத்தகத்தை நீங்கள் வாசித்தே தீர வேண்டும். 35 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனைத் துறையில் பணியாற்றிய தனது நீண்ட நெடிய அனுபவத்தின் அடிப்படையில் இந்நூலை உருவாக்கியிருக்கிறார் சிவக்குமார். உங்களுடைய நிச்சயமான வெற்றிக்கு உத்தரவாதமளிக்கும் பாடங்கள் பல இதில் உள்ளன.