Camera / கேமரா எனும் பயங்கரவா தியின் 78 மணிநேரம்


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE

Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Fast Delivery
Fast Delivery
Sustainably Printed
Sustainably Printed
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.

About The Book

இலங்கை அரசிடம் 78 மணி நேரம் சிறைபட்டுக் கிடந்த தனது அனுபவத்தையும் அங்கிருந்து விடுவிக்கப்பட்ட தருணத்தையும் கண்முன் நிறுத்துகிறார் தமிழ்ப் பிரபாகரன். இவருடைய முந்தைய நூல் புலித்தடம் தேடி.’’தமிழ்ப் பிரபாகரன் ஓர் ஊடவியலாளராக இருப்பதால்தான் இந்நூல் உருவாகியிருக்கிறது. ஊடக முதலாளிகளின் சுய தணிக்கை இழுப்புகள் அழுத்தங்கள் கொண்ட கார்ப்பரேட் ஊடகச் செய்தி அறைகளுக்கு இன்பம் அளிப்பவராக அவரை ஒருபோதும் நான் கண்டதில்லை. தமிழ்ப் பிரபாகரன் அடிப்படையில் சுதந்தரமானவராக இருந்திருக்கிறார். அதனால்தான் அவர் அதிகாரத்தைக் கேள்வி கேட்பவராக இருக்கிறார். மைய நீரோட்ட ஊடகங்களின் அழுத்தத்துக்கும் நிகழ்ச்சி நிரலுக்கும் எதிராக அவர் நீச்சலடிப்பதைப் பார்க்கிறேன்.இலங்கையில் மட்டுமல்லாமல் இந்தியா நிர்வகிக்கின்ற காஷ்மீர் அமைதியிழந்த வடகிழக்கு போன்ற அபாயகரமான மண்டலங்களிலிருந்தும் அவர் தீரத்துடன் செய்திகள் வழங்கிவருவதைப் பார்க்கிறேன். மற்றவர்கள் எழுப்பாத பொருத்தமான கேள்விகளை அவர் எழுப்புகிறார். மற்றவர்கள் பயணம் செய்ய அஞ்சும் இடங்களுக்குச் செல்கிறார். அந்த வகையில் தீரமிக்க இளம் ஊடகவியலாளராக இவர் திகழ்கிறார்.’’- ராஜேஷ் சுந்தரம்ஊடகவியலாளர். அல் ஜசீரா இந்தியா டுடே என்டிடிவி நியூஸ்7 தமிழ் போன்றவற்றில் முன்னணி பொறுப்புக்களை வகித்தவர்.
downArrow

Details