*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹194
₹225
13% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை (1902-1981) - பேராசிரியப் பெருந்தகை. சங்கத் தொகைநூல் பலவற்றிற்கு உரைநயம் கண்ட உரவோர்: சைவசித்தாந்த வித்தகர்; சொற்பொருள் நயம் உரைத்த சான்றோர்; பேச்சாலும் எழுத்தாலும் பிறர்உள்ளம் கவர்ந்தவர்; தமிழர் வரலாற்றைத் தகவுடன் உரைத்தவர்; ஊர்களின் உண்மைப் பெயர்களைக் கண்டறிந்தவர்; ஏடு படிப்பதிலும் கல்வெட்டு ஆராய்வதிலும் வல்லவர்; தம் சொந்த முயற்சியாலும் கடும் உழைப்பாலும் உலகம் போற்ற வாழ்ந்தவர்; மாணவர்களின் உள்ளம் கொள்ளை கொண்டவர்; தாம் வாழ்ந்த காலத்திலேயே பேரும் புகழும் பெற்றவர். ஔவை சு.துரைசாமி பிள்ளை, பல்வேறு பட்டங்கள் பெற்றவரேயாயினும் ‘உரைவேந்தர்’ என்பதே இறுதிவரை நிலைத்துள்ளது. இத்தகு பட்டத்தை வழங்கியது, மதுரைத் திருவள்ளுவர் கழகம்.