எழுத்தாளனின் அனுபவங்கள் சுயசரிதையாகத்தான் வெளிப்பட வேண்டும் என்பதில்லை. சுவாரசியமான கட்டுரைகளின் வாயிலாகவும் வெளிப்படலாம். அப்படியான அனுபவக் கட்டுரைகளும் ரா.கி.ர.வின் சிந்தனைச் சிதறல்களும் கட்டுரைகளாக உருவெடுத்துள்ளன இத்தொகுப்பில். அண்ணா நகர் டைம்ஸ் மாம்பலம் டைம்ஸ் போன்ற இதழ்களில் பதினொரு ஆண்டுகள் தொடர்ந்து அவர் எழுதியவை இவை. பொழுதுபோக்கவும் பொழுதைப் பயனுள்ளதாக்கவும் ஏற்ற கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு அவசியம் படித்து ரசித்துப் பயனுற வேண்டிய ஒன்று.