மேலாளர்கள் அவர்களுடைய நிறுவனத்திற்கு அளிக்கின்ற விளைவுகளால் எடைபோடப்படுகின்றனர். ஆனால் அந்த விளைவுகள் பொதுவாக அவர்களுக்குக் கீழே இருப்பவர்களால் உருவாக்கப்படுகின்றன. ஆகவே ஒரு மேலாளரின் வேலையின் மிக முக்கியமான அம்சம் தன் வேலைகளைத் தனக்குக் கீழே இருப்பவர்களிடம் பகிர்ந்தளித்து அவர்களைத் திறமையாக மேற்பார்வையிடுவதில் அடங்கியிருக்கிறது. இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள உத்திகளை நீங்கள் பயன்படுத்தும்போது உங்கள் குழுவினரின் செயல்திறன் மலையளவு அதிகரிப்பதைக் கண்டு நீங்கள் வியப்பின் உச்சிக்கே சென்றுவிடுவீர்கள். இந்நூலில் நீங்கள் கற்றுக் கொள்ளக்கூடியவற்றில் கீழ்க்கண்டவையும் அடங்கும்: • வேலைகளை உங்களின் கீழே உள்ளவர்களுக்குப் பகிர்ந்தளித்து அவர்களுக்கு இலக்குகளை நிர்ணயிப்பது எப்படி • அவர்களுடைய திறமைகளுக்குத் தீனி போடுகின்ற விதத்தில் வேலைகளைப் பகிர்ந்தளிப்பது எப்படி • ஒதுக்கப்பட்டுள்ள வேலைகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருப்பதைத் திறமையாகக் கண்காணிப்பது எப்படி • வேலைப் பகிர்வின் மூலம் அவர்களுடைய தன்னம்பிக்கையை உயர்த்துவது எப்படி • உங்களால் மட்டுமே செய்யப்படக்கூடிய உயர்தர வேலைகளைச் செய்வதற்கு நேரத்தை உருவாக்கிக் கொள்வது எப்படி வேலைப் பகிர்வும் அதன் மேற்பார்வையும் உங்களுடைய ஊழியர்கள் கற்றுக் கொள்ளவும் வளரவும் தங்களுடைய செயல்திறனை அதிகரித்துக் கொள்ளவும் வழிவகுக்கும். உங்களுடைய ஊழியர்களின் செயல்திறன் அதிகரிப்பால் விளைவுகள் பிரமாதமான விதத்தில் மேம்படும். வெற்றிச் சிகரத்தை நோக்கி நீங்கள் படுவேகத்தில் பயணிப்பீர்கள்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.