கிருஷ்ணர் போஜ வம்ச மன்னனான கம்சனை கொன்ற பிறகு வாசுதேவர் தேவகி உக்ரசேனர் ஆகிய மூவரும் நீண்ட கால சிறைவாசத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர். கிருஷ்ணரின் பாட்டனாரான உக்ரசேனர் மதுராவின் அரியணையில் அமர்த்தப்பட்டார். தன் மருமகனான கம்சன் கிருஷ்ணரால் கொல்லப்பட்டதை அறிந்த ஜராசந்தன் மதுராவை நோக்கிப் பதினேழு முறைப் போர் தொடுத்தான். பதினேழு முறையும் ஜராசந்தன் தோல்வியை தழுவினான். ஆனாலும் அவன் கிருஷ்ணரை பழிவாங்காமல் விடுவதாய் இல்லை. அப்பொழுது தான் கிருஷ்ணரின் இதயத்தில் யாராலும் நெருங்க முடியாத ஒரு புதிய நகரை கட்டமைக்க வேண்டும் என்கிற எண்ணம் எழுந்தது; உடனடியாக தேவர்களின் சிற்பியான விஸ்வகர்மாவை வரவழைத்து விஷயத்தை தெரிவித்தார். யாருக்கும் தெரியாத வகையில் மிகவும் ரகசியமாக கடலுக்கு நடுவே ஒரு நகரத்தை விஸ்வகர்மா உருவாக்க துவங்கினார். மக்களனைவரையும் துவாரகாவிற்கு அழைத்து சென்ற பிறகு என்னென்ன இன்னல்களை கிருஷ்ணர் சந்திக்க நேர்ந்தது என்பதை என்னுடைய கற்பனை கலந்த சுவாரஸ்ய கதையாக வடிவமைத்திருக்கிறேன். உங்களனைவருக்கும் இந்த கதை நிச்சயமாக பிடிக்கும் என்று நம்புகிறேன்
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.