*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹189
₹220
14% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
போட்டிகள் நிறைந்த இன்றைய உலகத்தில் சரியான ஒரு வேலை வாய்ப்பு கிடைப்பது மிகப் பெரிய போராட்டமாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் இந்தப் பிரச்சனையைச் சரியானபடி புரிந்துகொண்டு முறையான கட்டமைப்புடன் அதற்குத் தயாராகிறவர்களுக்கு ஒன்று இரண்டு இல்லை பல வேலைகள் கிடைக்கும். அந்தப் பயணத்துக்கு உங்களைத் தயார்செய்வதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.நீங்கள் எப்படி நல்ல வேலையைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களோ அதேபோல் நிறுவனங்கள் நல்ல ஊழியர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டு தேடல்களையும் சரியான புள்ளியில் இணைக்கும்போது சிறந்த வேலையைச் செய்யத் தகுதியுள்ள சிறந்த நபர் கிடைக்கிறார். அந்தப் புள்ளிக்கு உங்களை இந்தப் புத்தகம் அழைத்துச்செல்லும்.நல்ல வாய்ப்புகள் எங்கே இருக்கின்றன? அவற்றை அடையாளம் காண்பது எப்படி?என்னுடைய திறமைகளை அவர்கள் முன்கூட்டியே அறியும்படி செய்வதற்கு என்ன வழி?ரெஸ்யூம் ரெஸ்யூமெ சிவி பயோடேட்டா போன்றவையெல்லாம் ஒன்றுதானா? அதை எழுதுவது எப்படி? பராமரிப்பது எப்படி? பலருக்குக் கொண்டுசேர்ப்பது எப்படி?தொழில்நுட்பத் திறமைகளோடு சில மென் திறமைகளும் வேண்டும் என்கிறார்களே அது என்ன?நேர்காணல்களுக்குத் தேவையான உடல்மொழி நுட்பங்கள்வேலை கிடைத்தபின் பண விஷயம் பேசுவது எப்படி? நம் தகுதிக்கேற்ற சம்பளத்தைப் பெறுவது எப்படி? சம்பளத்துடன் வேறு என்னென்ன விஷயங்களைக் கவனிக்கவேண்டும்?சுவையான பயனுள்ள இந்தக் கையேட்டைப் படியுங்கள். எனக்கு வேலை கிடைக்குமா? என்ற ஐயத்தை விடுங்கள் எனக்கு வேலை கிடைக்கும்! என்று உரக்கச் சொல்லுங்கள்