பாரிவள்ளல் பொற்குவியல்களைப் புலவர் பெருமக்களுக்கு வாரி வழங்கியதாக அறிந்து மகிழ்கிறோம்! பாரி நிலையத்தினர் என் எண்ணக் குவியல்களைத் தமிழ் மக்களுக்கு வாரி வழங்கி வருகின்றனர். அவர்கட்கு என் நன்றி.

எனது 'தமிழர் நாடு'இதழ்களில் அவ்வப்போது எழுதி வெளியிடப்பெற்ற கட்டுரைகளே இன்று எண்ணக் குவியல்களாய் வெளிவருகின்றன. இந் நூலில் தமிழ் மக்களின் எண்ணம் பெரிதும் குவியவேண்டும்.

கட்டுரைகளுள் ஒவ்வொன்றும் நாட்டை மொழியை முன்னிறுத்தி எழுதப்பெற்றது. இது அறிவை ஆராய்ச்சித் துறையில் வளர்ப்பதும் ஒழுக்கத்தை வலியுறுத்திக் கூறுவதும் ஆகும். இது ஆடவர் பெண்டிர் அனைவருக்கும் தேவை. படித்துப் பயன்பெறுவது நல்லது.

நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் நமது தமிழகத்தில் இருக்கவேண்டிய அளவு இன்றில்லை. அவற்றை வளர்க்க இந்நூல் துணை செய்யும். சிறுவர் சிறுமியர்க்கு இது பாடப் புத்தகமாக அமையுமானால் நான் மகிழ்வேன்.

தமிழ் நாட்டிற்கும் தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் தொண்டு செய்யும் அன்பர்களுக்கெல்லாம் எனது நன்றிகலந்த வணக்கம் உரியதாகட்டும்.

Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.