*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹270
₹399
32% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
பூமியில் உயிரினம் எவ்வாறு தோன்றியது என்பதையும் உயிரினங்களுக்கு இடையே இன்று நாம் காண்கின்ற பரவலான பன்முகத்தன்மையை நாம் எப்படி அடைந்தோம் என்பதையும் இந்நூல் விவரிக்கிறது. இந்நூலில் பரிணாம வளர்ச்சியைச் சுருக்கமாகவும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வகையிலும் சுவாரசியமாகவும் இந்நூலாசிரியர் விவரிக்கிறார். அந்தப் புரிதல் நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு எந்த அளவு அவசியமாகியுள்ளது என்பதை அவர் இதில் வலியுறுத்துகிறார். சார்லஸ் டார்வினைப் பற்றி அவர் மேற்கொண்ட வித்தியாசமான விவாதங்கள் பரிணாம வளர்ச்சி குறித்த எண்ணங்களின் தோற்றம் போன்றவை இதில் விவரிக்கப்படுகின்றன. நம்முடைய இன்றைய சூழலைப் புரிந்து கொள்வதற்கு நாம் அவசியம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாக அவர் குறிப்பிடுபவற்றில் இவையும் அடங்கும்: மரபணுத் திரிபு; இனம் பாலினம் மற்றும் பாலீர்ப்பு; வம்சாவளிச் சோதனைகளின் வரம்பெல்லைகள்; உலகையே புரட்டிப் போட்டக் கொரோனா வைரஸ் போன்ற தொற்றுநோய்க் கிருமிகளின் பரிணாம வளர்ச்சி. ஸ்டீபன் ஜே கோல்டு ஜெர்ரி கோயின் போன்ற பரிணாம உயிரியலாளர்களின் புத்தகங்களின் வரிசையில் தற்காலத்திய தகவல்களையும் உள்ளடக்கி வந்துள்ள இப்புதிய நூல் பல விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு நம் அனைவரின் ஒட்டுமொத்த வருங்காலச் சவால்களை நாம் எதிர்கொள்வதற்குத் தேவையான அறிவியல் அறிவை வழங்குகின்ற ஓர் அடிப்படைக் கையேடாகவும் விளங்குகிறது.