இணையத்தின் #1 சமூக ஊடகம் உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஃபேஸ்புக்கின் விறுவிறுப்பான வெற்றிக்கதை!இன்றைக்கு நம்முடைய நிஜ நண்பர்களைவிட ஃபேஸ்புக் நண்பர்கள் மீதுதான் அதிக அன்பும் மதிப்பும் வைத்திருக்கிறோம். எதைச் சாப்பிட்டாலும் எதைச் சாதித்தாலும் படமெடுத்து ஃபேஸ்புக்கில் பதிப்பிக்கிறோம். ஃபேஸ்புக் லைக்குகள் ஒவ்வொன்றும் தலைக்குள் கைதட்டல்களாகக் கேட்கின்றன. எதையேனும் வாங்குவதென்றால் முதலில் ஃபேஸ்புக்கில்தான் கருத்து கேட்கிறோம் ஃபேஸ்புக் மெசஞ்சர் செய்திகள் குழுக்கள் வீடியோக்கள் இன்னும் அவர்கள் அறிமுகப்படுத்துகிற புதுப்புது வசதிகள் ஒவ்வொன்றும் உடனடியாக நம்முடைய புதிய தகவல் தொடர்புக் கருவிகளாகிவிடுகின்றன... வரலாற்றில் வேறு எந்த நிறுவனமும் சமூக உறவுகளை இப்படிப் புரட்டிப்போட்டதில்லை.ஃபேஸ்புக் என்ற நிறுவனம் எப்படித் தொடங்கியது?இப்படியொரு சிந்தனை யாருக்கு முதலில் வந்தது எப்படி வந்தது?அதை இத்தனை பெரிய நிறுவனமாக ஆக்குவதில் அவர்களுக்கு உதவியவர்கள் யார் யார்?அவர்கள் சந்தித்த சவால்கள் என்னென்ன? அவற்றை எப்படிச் சமாளித்து முன்னேறினார்கள்?ஃபேஸ்புக்கின் போட்டியாளர்கள் யார் யார்? மற்றவர்களுக்குச் சாத்தியமாகாத ஒரு வெற்றியை ஃபேஸ்புக் பெற்றிருப்பது எப்படி?வருங்காலத்தில் ஃபேஸ்புக் எப்படி வளரும்? என்னவெல்லாம் செய்யும்?... இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் விறுவிறுப்பான மொழியில் சான்றுகளுடன் பதிலளிக்கிறது என். சொக்கனின் இந்தப் புத்தகம். வாங்கிப் படியுங்கள் ஃபேஸ்புக்கின் வெற்றிக்கதையைத் தெரிந்துகொள்ளுங்கள்.இந்த வரிசையில் என். சொக்கனின் மற்ற நூல்கள்: கூகுள்: வெற்றிக்கதை ட்விட்டர்: வெற்றிக்கதை
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.