ஓய்வு ஐபிஎஸ் அதிகாரியும் முன்னாள் சிபிஐ இயக்குநருமான ஜோகிந்தர் சிங் நேர்மையான உழைப்பு மற்றும் செயலூக்கத்தின் மூலம் ஒரு சாதாரன மனிதன் புகழின் உச்சியை அடைவது எப்படி என்பதற்கான ஒரு வாழும் ஆதாரமாவார். அவரது வாழ்வு உயர்வடைய விரும்புகின்ற எந்த ஒரு இளைஞனும் ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடிய வெற்றிக் காவியமாகும்.<br>திரு. ஜோகிந்தர் சிங் வழங்கியுள்ள இந்த படைப்பு சுய முன்னேற்றம் பற்றிய ஒரு ஆய்வாகும். இந்த வெற்றிக்கதை ஒரு சாதனையாளராவது எப்படி என்ற வெற்றியின் இரகசியங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. உங்களிடம் அவர் கூறுகின்ற வெற்றியின் தாரக மந்திரம்; எல்லா வாய்ப்புகளையும் நன்றாக பயன்படுத்திக்ரெள்ளுங்கள்: பெரிதாக கனவு காணுங்கள் கடுமையாக உழையுங்கள்; கனவுகள் மெய்ப்படும். ஒரு வெற்றியாளனாவதற்கு உங்கள் திறமையையும் உங்கள் நடத்தையையும் நீங்கள் மட்டும்தான் கூர் தீட்ட வேண்டும்.<br>வெற்றி என்பது எப்போதுமே ஒரு தேர்வுதான் என்பதை மறந்துவிடாதீர்கள். தேவைப்படும் உழைப்பையும் தியாகங்களையும் செய்வதன் மூலம்தான் நீங்கள் வெற்றிகரமானவராக திகழ முடியும். இன்று என்பதே சிறந்தது. உங்கள் எதிர்பார்ப்புகள் கவனம் செலுத்தினால் மட்டுமே நிகழும் செயலூக்கமே வெற்றியின் அடிப்படை.