ஆவி பேய் ஆகியவை உண்டென்றும் இல்லையென்றும் இரு கட்சிகள் உண்டு. நம்பிக்கை இல்லாதவர்களும் விறுவிறுப்புக்காக விரும்பிப் படிக்கிற ஒன்று கோஸ்ட் கதைகள். அப்படிப் பல ஆவிக் கதைகளை பல முத்துகளை ஒரு நூலில் கட்டுவதைப் போல ஒரு கதையினுள் புகுத்தியிருக்கிறார் ரா.கி.ர. மந்திராலய தரிசனத்துக்குப் போன ஒருவனிடம் அவன் நண்பன் தான் சந்தித்த அனுபவங்களை விவரிப்பதாய் கோஸ்ட் கதைகள் விரிகின்றன. இறுதியில் கதை கேட்ட நண்பனின் பிரச்சனையும் தீர்கிறது. வாசகர்களுக்கும் அதுவரை ரோலர் கோஸ்டரில் பயணித்த உணர்வு நீங்கி நிம்மதி பரவுகிறது.