கௌரி கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் எழுதிய எழுத்துகளை சந்தன் கௌடா தொகுத்து இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருப்பது பாராட்டத்தகுந்தது. கௌரி உயிருடன் இல்லாவிட்டாலும் அவரது சந்தேகத்துக்கு இடமில்லாத எண்ணங்கள் சுதந்திரம் மனித நேயம் ஜனநாயகம் ஆகியவற்றைப் பேசும் வாசகர்களைத் தொடர்ந்து சென்றடைந்து கொண்டே இருக்கும். குடிமகனாகவும சமூக செயல்பாட்டாள ராகவும் கட்டாயம் பேசப்பட வேண்டியவை என அவர் உணர்ந்துள்ள விஷயங்களை அக்கறையை அவரது எழுத்துகள் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. அப்படி பேசுவது தனது கடமை என்றும் அவர் நினைத்தார். தங்களது செயல்பாடுகளின்போது உயிரை இழந்து சிறந்த நெறிகளைக் காட்டிய பெண்கனின் ஆண்களின் வரிசையில் அவருக்கும் இடம் உண்டு. வாழ்க்கையை நேசித்து அவர் இழந்த உயிர் நெருக்கடியில் முற்றுகையிடப்பட்ட இந்தியாவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.