பௌத்த சமயத்தின் தத்துவமாகிய நான்கு வாய்மைகளும் அஷ்டாங்க மார்க்கங்களும் பன்னிரு நிதானங்களும் இந்நூலுள் காட்டப் பௌத்த மதத் தத்துவத்தை ஆழ்ந்து கற்பவருக்கு இவை சிறிதளவுப் பயன்படக்கூடும். இந்நூலின் இறுதியில் பின் இணைப்பாகத் திரிசரணம் தசசீலம் திரிபீடக அமைப்பு ஆகிய இவைகள் விளக்கப்பட்டுள்ளன. பழந்தமிழ் நூல்களிலே சிதறிக்கிடக்கிற புத்தர் புகழ்பாக்கள். வாசகர்களுக்கு இன்பம் பயக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.