ஹா்ஷ வர்த்தனன் என்னும் இச்சிறுநூல் “பாணன்” எழுதிய 'ஹா்ஷ சரித்திரத்தையும், வி.ஏ.ஸ்மித் (V.A.Smith) ரா.சி.டட் (R.C.Dutt) கே.ம.பானிக்கர் (K.M.Panikkar) முதலிய சரித்திர ஆசிரியர்களின் ஆய்வுரைகளையும், துணையாகக் கொண்டு ஆராய்ந்து எழுதப்பட்டதாகும். இது, இடங்களுக்கு ஏற்ப தமிழ் இலக்கிய அடிகளை ஆங்காங்கு கொண்டுள்ளது. இதில் 'ஹா்ஷனுடைய நற்குண நற்செயல்களும் சகோதர சகோதரி யன்பும், புத்தமத விவரமும், 'ஹா்ஷனின் தொண்டும், அரசியலும் நன்கு விளக்கப்பட்டுள்ளன. இடையிடையே உயிர்க்கு உறுதியை பயக்கும், நீதிக் கட்டுரைகளை இதனிற் காணலாம். மாணவ உலகம் இதனைப் படிப்பதால் பண்டைக்கால அரசரது வரலாற்றையும் குணாதிசயங்களையும் அறிவதோடு, ஆங்காங்கு மருவிக்கிடக்கும் படிப்பினைகளையும் கற்றுப் பயன்பெறுவர்.என்பது திண்ணம்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.