ஹாஸ்ய ரசம் நவரசங்களில் ஒன்று. ஹாஸ்யத்தை எழுத்து வடிவில் எப்படிக் கொண்டு வரலாம்? சம்பவங்களின் மூலம் உரையாடல்களின் மூலம் ஏன்.. கடித வடிவில்கூடக் கொண்டுவர இயலும். இந்த அத்தனை வகையான ஹாஸ்யங்களுக்கும் உதாரணமான கதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. படிக்கையில் உதடுகளில் புன்னகையும் முடித்தபின் மனத்தில் உற்சாகமும் குடியிருப்பது நிச்சயம். படித்துச் சிரிக்கத் தயாராகுங்கள்.