மாரடைப்பை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியுமா? ஆஞ்சியோகிராம் ஆஞ்சியோபிளாஸ்டி ஸ்டென்ட் பைபாஸ் அறுவைச் சிகிச்சையால் உயிருக்கு ஆபத்து வருமா? அறுவைச் சிகிச்சையை யாருக்கு செய்யலாம்? யாருக்கெல்லாம் செய்யக் கூடாது? ஆஞ்சியோபிளாஸ்டி பைபாஸ் சர்ஜரிக்குப் பிறகு மீண்டும் மாரடைப்பு வருமா? ஏழை மக்கள் இலவசமாக பைபாஸ் உள்ளிட்ட பிற இதய நோய் சிகிச்சைகளைப் பெற என்ன வழி? இரண்டாவது மாரடைப்பு எப்போது வரும்? அதைத் தடுப்பது எப்படி? போன்ற மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களுக்கான நவீன சிகிச்சை முறைகள் மாரடைப்பைத் தவிர்க்கும் வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவற்றைப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம். நூலாசிரியர் இ. பக்தவச்சலம் பொது மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற்றவர். காச நோய் மற்றும் நெஞ்சக நோய்களுக்கான சிறப்பு டிப்ளமோ முடித்தவர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். 36 ஆண்டுகளாக மருத்துவச் சேவை ஆற்றி வரும் இவர் பொது மருத்துவம் இதயம் நுரையீரல் பிரச்னைகளுக்கு சிறப்பு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.