*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹368
₹499
26% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
வாழ்க்கையில் எல்லாவற்றையும் கைவசப்படுத்தியுள்ள வெற்றியாளர்களைக் கண்டு அது எப்படி அவர்களுக்குச் சாத்தியமானது என்று நீங்கள் வியந்ததுண்டா? வணிகக் கூட்டங்களாகட்டும் சிறு சந்திப்புக்கூட்டங்களாகட்டும் அங்கு அவர்கள் அனைவருடனும் தன்னம்பிக்கையுடன் பேசுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்களைப் போன்ற நபர்கள்தாம் நல்ல வேலைகளையும் சிறப்பான வாழ்க்கைத் துணைவர்களையும் சுவாரசியமான நண்பர்களையும் பெற்றிருக்கின்றனர். அவர்கள் உங்களைவிட அதிக சாமர்த்தியமானவர்களாகவோ அல்லது அதிக வசீகரமானவர்களாகவோ இருப்பதால் அவர்கள் வெற்றியாளர்களாக இருப்பதாக நீங்கள் நினைக்க வேண்டியதில்லை. பிறருடன் கலந்துரையாடுவதற்கும் அவர்களுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்குமான அதிக ஆற்றல்மிக்க ஒரு வழியை அவர்கள் அறிந்துள்ளனர் அவ்வளவுதான். இந்நூலில் இடம்பெற்றுள்ள உத்திகளில் இவையும் அடங்கும்: • எடுத்த எடுப்பிலேயே உங்களைப் பற்றிய ஒரு சிறந்த அபிப்பிராயத்தைப் பிறரிடம் தோற்றுவிப்பது எப்படி? • எந்தவொரு கூட்டத்திலும் அக்கூட்டம் தொடர்பான விஷய ஞானம் உங்களிடம் இருப்பதாகக் காட்டிக் கொள்வது எப்படி? • உரையாடல்களின்போது எப்போது பிறருடைய அகங்காரத்திற்குத் தீனி போட வேண்டும் எப்போது போடக்கூடாது என்பதை அறிந்து கொள்வது எப்படி? • உங்களுடைய அலைபேசியை ஒரு சிறந்த கருத்துப் பரிமாற்றக் கருவியாகப் பயன்படுத்துவது எப்படி? • உங்கள் முன் இருப்பவர்களை கைதேர்ந்த ஓர் அரசியல்வாதியைப்போல உங்களுடைய பேச்சால் கட்டிப்போடுவது எப்படி?