இதய பேரிகை - கலைஞர் மு. கருணாநிதி

வேதனைப் புயலொன்று கிளம்பிற்று. தமக்கும் நமது தலைவருக்கும் இருந்துவந்த பாசமென்னும் பூந்தோட்டத்தை பாழாக்கிற்று. தலைவரைக் கண்டிக்கவேண்டிய பாரம் நமது இதயத்தின்மீது ஏற்பட்டுவிட்டது. அவர் மிக மிகச் சாதாரணமென்று கூறும் திருமணச் சம்பவத்தால் நமது திகைப்பு கண்ணீர் பயனற்றுப்போய் நமது நிலையிலே ஒரு ''வருந்தத் தக்க மாறுதல் ஏற்பட்டுவிட்டது

மாலை மணி பத்திரிகையின் முதல் இதழிலே தலையங்கத்தை இப்படித் தீட்டியிருந்தார் அண்ணா.

வருந்தத்தக்க மாறுதல் ஏற்பட்டுவிட்டது.

அந்த வாசகத்தை ஊன்றிக் கவனிக்க வேண்டும்.

சரித்திரம் படித்து--சர்வதேச அரசியலிலே திளைத்து -தியாக முத்திரைகளைப் பெற்று-பேச்சால் -எழுத்தால் -நடிப்பால் பேரறிஞர் முதல் பாமரர் வரையில் தங்கள் கருத்தின் பக்கம் திரும்பக்கூடிய அளவுக்கு திறமையோடு பணிபுரியும் ஆயிரமாயிரம் தம்பிமார்கள் இருந்தும் அவர்களை வைத்துக் கொண்டு மாற்றார் மலைக்குமளவுக்கு-விரோதிகள் வெகுளுமளவுக்கு சந்தேகங்கொண்டோர் சந்தோஷப்பட; சாபம் கொடுத்தோர் சஞ்சலப்பட சமுத்திரத்தின் பேரலைகளென ஓயாது உழைத்துவரும் உண்மைத் தொண்டர்கள் பதினாயிரக் கணக்கில் இருந்தும் அவர்களை வைத்துக்கொண்டு ஒரு மகத்தான அரசியல் இயக்கத்தை நடத்தக்கூடிய மனப் பக்குவமும் மனவலிமையும் கொண்ட அறிஞர் அண்ணா 'வருந்தத்தக்க மாறுதல்'என்று வாட்டத்துடன் குறிப்பிட்டார் என்றால் அந்தச் சூழ்நிலையை எப்படித்தான் விவரிக்கமுடியும்.

சுரங்கத்திலிரங்கி தங்கம் பெயர்க்கும்போது பாறையொன்று உருண்டுவிழ-அந்தப் பாறையிடமிருந்து தப்பித்துக் கொள்ளும் முயற்சியும் நாம் கொள்கையைக் காப்பாற்ற எடுத்துக்கொண்ட முயற்சியும் ஒன்றேதான்.

Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.