This combo product is bundled in India but the publishing origin of this title may vary.Publication date of this bundle is the creation date of this bundle; the actual publication date of child items may vary.முதலில் தான் ஒரு ஜெர்மானியர் பிறகுதான் தான் ஒரு யூதர் என்று எடி ஜேக்கூ தன்னைப் பற்றி எப்போதுமே கருதி வந்திருந்தார். ஆனால் அந்த எண்ணம் 1938 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நாஜிப் படையினர் அவரை அடித்து உதைத்துக் கைது செய்து வதை முகாமுக்கு இழுத்துச் சென்றபோது முற்றிலுமாக மாறியது. அதற்கடுத்த ஏழு ஆண்டுகள் கற்பனையில்கூட யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத கொடூரங்களை எடி நாள்தோறும் அனுபவித்தார் நாஜிக்களிடம் அவர் தன்னுடைய குடும்பத்தினரையும் நண்பர்களையும் தன்னுடைய சொந்த நாட்டையும் இழந்தார். இறுதியில் அவர் எப்படியோ தப்பிப் பிழைத்துவிட்டதால் இனி தன் வாழ்நாள் முழுவதும் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதென்று அவர் ஓர் உறுதிமொழி மேற்கொண்டார். அவர் தன்னுடைய வதை முகாம் அனுபவங்களிலிருந்து தான் கற்றுக் கொண்டவற்றைப் பற்றிச் சொற்பொழிவுகள் ஆற்றி வருவதன் மூலமும் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருவதன் மூலமும் நாஜிக்களின் அடக்குமுறையின்கீழ் உயிரிழந்தவர்களுக்கும் தங்களுடைய சொந்தபந்தங்களை இழந்தவர்களுக்கும் அவர் அஞ்சலி செலுத்துகிறார். அவருடைய 100 ஆவது பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்ட இந்நூல் இருண்ட காலகட்டங்களில்கூட மகிழ்ச்சியைக் கண்டுகொள்ள முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கின்ற ஒன்றாக மிளிர்கிறது. NA
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.