எல்.இளையபெருமாள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களை வரிசைக்கிரமமாக அடுக்கிச் சொல்வதாக மட்டுமல்லாமல் அவர் செயல்பட்ட காலகட்டம் - வட்டாரம் அவரின் தாக்கம் விளைவுகள் என்று பல்வேறு கண்ணிகளை இணைத்து விரிந்திருக்கிறது இந்நூல். மேலும் இளையபெருமாளின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமல்லாது அவரை மையமாக வைத்து தலித் அரசியல் வரலாற்றைப் பேசியிருக்கிறது. பாலசிங்கம் எழுதியிருக்கும் முதல் நூல் எனினும் தமிழக தலித் அரசியல் பற்றி அவருக்கிருக்கும் பார்வையும் புலமையும் இந்நூலை எழுத உதவியிருக்கின்றன - ஸ்டாலின் ராஜாங்கம்