அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இலக்கு வாராந்த மின்னிதழில் வெளிவந்த 100 ஆசிரியர் தலையங்கங்களின் தொகுப்பாக இந்த நூல் வெளிவருகின்றது. இலக்கு நோக்கிய பயணத்தில் இந்த ஆசிரியர் தலையங்கங்கள் காலத்துக்கு காலம் ஈழத்தமிழ் மக்களின் சமூக அரசியல் வாழ்வியலில் இடம்பெற்ற வளர்ச்சிகளையும் தளர்ச்சிகளையும் எடுத்துக்கூறி அவர்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை மீள்விப்பதற்கான சிந்தனை வழிகாட்டுதலாக அமைந்துள்ளன. இதனை ஒவ்வொரு ஈழத்தமிழ் மக்களும் வாசித்து உங்களின் அனுபவங்களையும் ஆற்றல்களையும் பயன்படுத்தி ஈழத்தமிழ் மக்களின் இலக்கை அடைவதற்கான செயற்பாடுகள் மேலும் வேகம்பெற உதவ வேண்டும் என்பதே இலக்கின் எண்ணமாகும்.. இலக்கு மின்னிதழின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் உதவி வருகின்ற அனைவருக்கும் இதய நன்றியுடன் கூடிய அன்பு வணக்கம்!.. - இலக்கு ஆசிரியர் குழு
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.