India Jananayagam Enge Pogirathu

About The Book

தலைவர் கலைஞர் அவர்கள் 1984 செப்டம்பர் 15 16 ஆகிய நாட்களில் காஞ்சிபுரத்தில் நடை பெற்ற அண்ணா மாவட்ட தி. மு.க. மாநாட்டில் ஆற்றிய நிறைவுப் பேருரை இந்நூல் வடிவில் தலைமைக் கழகத்தால் வெளியிடப்படுகிறது.

இந்தியாவிலே இன்றைக்கு இருக்கின்ற ஆட்சி அமைப்பு முறை-ஜனநாயகமுறை மாற்றப்பட்டு ஜனதிபதி ஆட்சிமுறை- ஜனாதிபதி ஆட்சிமுறை என்றால் டெல்லிப் பட்டணத்திலே இருக்கின்ற பெரிய கட்டிடத்திலே அமர்ந்து ஜெயில்சிங் மத்திய அரசின் கைப் பாவையாக இருக்கின்றாரே அதுபோல அல்ல!.

இலங்கையில் ஜெயவர்த்தனே இருக்கிறாரே அது போன்ற ஜனாதிபதியாக இங்கே இந்திராகாந்தி ஆளத் துடிக்கிறார். இப்போது ஜனாதிபதி ஆட்சி முறை வருவதால் ஜனநாயகத்திற்கு ஆபத்து வராது என்று சொல்லுகிறார்கள்.

புலி பாய்வதால் குழந்தையின் உடம்பிலே காயம் ஏற்படாது என்று சொன்னால் அது எப்படி பைத்தியக்காரத்தனமோ- பாம்பு கடித்தால் விஷம் ஏறாது என்று சொன்னால் அது எவ்வளவு முட்டாள்தனமோ-அல்லது மற்றவர்களை முட்டாள்களாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ!

அதைப் போலத்தான் ஜனாதிபதி ஆட்சி முறை வந்தால் ஜனநாயகத்திற்கு கேடு வராது என்று எடுத்து வைக்கின்ற வாதம்.

அண்ணா மாவட்ட தி. மு. கழகத்தினுடைய ஆறாவது மாநாட்டில் நேற்றும் இன்றும் கண்கொள்ளாக் காட்சியாக உங்களையெல்லாம் பார்த்து பரவசமடைந்து என்ன பேசுவது என்று தெரியாத நிலையில் உங்கள் முன் நான் நின்று கொண்டிருக்கின்றேன்.

இந்த மாநாடு நடைபெற வேண்டும் என்று நாங்கள் எண்ணிய போது மாநாட்டை நடத்துகின்ற நண்பர் களுக்குத் தரப்பட்ட அவகாசத்தை சிந்திக்கிற போது-- இவ்வளவு சிறப்பாக இந்த மாநாடு நடைபெறுமா என்று நாங்கள் எண்ணியது உண்டு.

Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
downArrow

Details

LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE