இந்திரா பார்த்தசரதியின் அனைத்து நாடகங்களையும் கொண்ட முழுத் தொகுப்பு இது. இந்தக் கணம் பார்த்து அடுத்தக் கணம் நினைவை விட்டு அகன்றுவிடும் நாடகங்கள் மலிந்த காலத்தில் எந்தக் காலத்துக்கும் பொருந்தும் தன்மை கொண்டது இந்நாடகங்களின் தனிச்சிறப்பு. தமது ‘ராமானுஜர் நாடகத்துக்காகப் பெருமைக்குறிய சரஸ்வதி சம்மான் விருது பெற்றிருக்கும் இந்திரா பார்த்தசாரதி தமிழின் மிக முக்கியமான படைப்பு ஆளுமை.சிறு கதை நாவல் நாடகம் கட்டுரைகள் எனப் பல துறைகளில் குரிப்பிடத்தகுந்த சாதனைகள் புரிந்தவர் என்றாலும் மிக அதிகம் நினைக்கப்படுவது அவரது புகழ் பெற்ற நாடகங்களுக்காக. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் சிலகாலம் நாடகத்துறை பேராசிறரியராகவும் பணிப்புரிந்திருக்கிறார். சாகித்ய அகடமி சங்கீத நாடக அகடமி பாரதிய பாஷா பரிஷத் உள்பட பல விருதுகள் பெற்றவர். கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்தவரான இ.பா. பலகாலம் டெல்லியில் வாழ்ந்தவர். தற்சமயம் வசிப்பது சென்னையில். வயது 77
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.