கவிதை ஓவியம் மொழிபெயர்ப்பு கலை விமர்சனம் எனப் பல தளங்களில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருபவர் இந்திரன். இந்தப் பின்னணியில் அவருடைய பங்களிப்புகளை மதிப்பிட்டு வானம் கலைத் திருவிழா - ‘வேர்ச்சொல்’ இலக்கியக் கூடுகையில் ''வேர்ச்சொல் தலித் இலக்கிய விருது 2023’ என்ற விருது நீலம் பண்பாட்டு மையத்தால் வழங்கப்படுகிறது. அதையொட்டி இந்திரன் பற்றி இந்தத் தொகுப்பு வெளிவருகிறது. அவரைப் பற்றி முன்னோடிகள் எழுதிய குறிப்புகளோடு இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்களும் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்திரனின் படைப்புகள் மட்டுமல்லாது அவர் வடிவமைத்த அட்டைப்படம் உள்ளிட்ட கலைப் பங்களிப்புகளையும் மதிப்பிடும் கட்டுரைகள் இருக்கின்றன. இந்திரன் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பும் புதிய முயற்சியாக இடம்பெற்றிருக்கிறது. இத்தொகுப்பு இந்திரனை வாசிப்பதற்கான - புரிந்துகொள்வதற்கான சிறு வாசலைக் காட்டும்.