இதில் உள்ள பதினைந்து கதைகளும் பதினைந்து விதமானவை. ஒரு கதையின் தாக்கமோ சாயலோ இன்னொரு கதையில் இல்லை. ஆயிரம் முகமூடிகள் அணிந்து ஒருவர் தன் வெளித் தோற்றத்தை எளிதில் உருமாற்றி காட்டிவிட முடியும். ஆனால் ஒருவரின் வேறு வேறு சிந்தனைகள் ஒன்றின் மீது ஒன்று ஆதிக்கம் செலுத்தி விட முடியாதவாறு ஒவ்வொன்றையும் வேறு வேறு களங்களில் நின்று இயங்க வைத்து அவற்றை எழுத்து வடிவில் எழுதி பிறர் அறிவிற்கு அதை கடத்துவது என்பது மிகக்கடினம். அந்தக் கடினமான செயலை தன் கற்பனைத் திறன் மூலம் எழுத்தாக்கிக் காட்டியிருக்கிறார் இரண்டாம் உலகம் என்கிற இந்த சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் உதயா சக்கரவர்த்தி