ஜின்னா இன்றுவரை ஒரு புதிர். அவரது சாதனைகளுக்குச் சற்றும் குறைவானதல்ல அவர் குறித்த சர்ச்சைகள். ஜின்னா குறித்து பொதுபுத்தியில் பதிந்துபோயுள்ள பல விஷயங்கள் தவறானவை அல்லது குறைபாடுள்ளவை. சரித்திரப் புத்தகங்கள் அவரை ஒரு பிரிவினைவாதியாக முன்னிறுத்துகின்றன. காந்திக்கு எதிரானவராக ஒன்றுபட்ட இந்தியாவுக்கு எதிரானவராக இந்து-முஸ்லிம் நல்லிணக்கத்துக்கு எதிரானவராக இன்றுவரை ஜின்னா அடையாளம் காணப்படுகிறார். ஒரே சமயத்தில் சிலருக்கு மதத்தலைவராகவும் இன்னும் சிலருக்கு மதத்தைக் கடந்தவராகவும் வேறு சிலருக்கு மத நல்லிணக்கம் கொண்டவராகவும் ஜின்னா திகழ்வது விசித்திரமானது. ஜின்னா குறித்து மட்டுமல்ல அவர் உருவாக்கிய பாகிஸ்தான் குறித்தும் நாம் பெரும்பாலும் மாறுபட்ட கருத்துகளே கொண்டிருக்கிறோம். ஜின்னாவின் நல்லியல்புகளை வெளிப்படையாகப் புகழும் எவரும் இங்கே கடும் விமரிசனத்துக்கு உள்ளாகிறார்கள். அரசியல் மதம் தேச பக்தி என்று அனைத்து அம்சங்களிலும் ஜின்னா இந்தியாவுக்கு எதிரானவராக இருப்பதாக நமக்குத் தோன்றுவதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கமுடியும். நாம் அவரை இந்தியாவில் இருந்து ஒரு பாகிஸ்தானியராகப் பார்க்கிறோம். ஜின்னாவின் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை விவரிக்கும் இந்நூல் ஜின்னாவின் பிம்பத்தை மாற்றியமைக்கப் பயன்படும்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.