காலங்கள்தோறும் பெண்ணின் நிலை எப்படி ஆணுக்குக் கீழானதாக ஆக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை இந்திய வரலாற்றின் மதநூல்கள் தொடங்கி மேற்கத்திய ஆய்வுகள் அம்பேத்கரின் எழுத்துக்கள் மற்றும் சமகாலப் பெண்கள் பிரச்சினைகளிலிருந்து அணுகும் ஒரு சமூக ஆய்வு நூல் இது. வேதங்கள் திருமணச் சடங்குகள் மந்திரங்கள் மத குருமார்கள் எப்படிப் பெண்ணை அடிமைத்தனம் எனும் ‘பாசிக்குட்டையில்’ பிணித்துவைத்திருக்கின்றனர் என்பதை ஆதாரங்களுடனும் அறச்சீற்றத்துடனும் முன்வைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு. கற்பு குடும்பம் பத்தினிமை என அமைக்கப்பட்ட மரபுகளைக் கட்டுடைக்கும் பெண்ணிய ஆராய்ச்சி ஆயுதம்!
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.