இலங்கையின் முப்பதாண்டுகால இனப்போர்ப் பிரதேசத்துள் நிகழும் புனைவிது. போருக் காகக் கட்டமைக்கப்படும் நியாயப் புனிதங் களின் இருள் ஆழங்களில் புதையுண்ட வரலாற்றுண்மைகளை மானுட அறத்தின் ஒளி மூலம் பேச விழையும் பிரதி. வரலாற்றாசிரியர்கள் பேசத் தயங்குகிற பேசுவதற்குரிய ஆதாரப் புள்ளிகளை முன்வைக்க முடியாத சூழலில் உருவாகும் இடைவெளிகளை இந்தப் புனைவு நிரப்ப முயல்கிறது. புனைவெழுத்தின் சாத்தியங்களும் அதற்கான துணிவுமே இதனுடைய விரிவும் வலிமையும். உண்மைகள் எங்கும் எந்த ரூபத்திலுமிருக்கும். அவற்றைக் கண்டடைவதே இலக்கியப் பிரதியின் வழி என்ற நம்பிக்கையின் துணிவோடு நிகழும் காலக்கதை. மெய்யும் புனைவுமான கலவையில் துலங்கும் வரலாற்றுப் பாடமிது. உருமறைப்புச் செய்யப்பட்ட உண்மைகளின் கணகளைத் திறந்து நமது கண்களை ஊடுருவிப் பார்க்கும் சாட்சியம்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.