காதல் ஒரு சங்கீதம் இது ஒரு காதல் கதை. தான் செய்வதே சரி என வாதிடும் அண்ணன். அப்பாவை போல பாசத்தை அள்ளி தரும் அக்கா கணவன். பருவக்கோளாறால் தன் வாழ்வையே தொலைத்து விட்ட சகோதரி. மகனை கண்மூடிதனமாக நம்பும் அன்னை. மகனை எதிர்க்கவும் இயலாமல் உணர்வு போராட்டத்தில் தவிக்கும் தந்தை. தன் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் மருந்தாக வந்த நாயகனை சூழ்நிலையால் ஏற்கவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் தத்தளிக்கும் நாயகி. தன் காதல் தன்னை கைவிடாது என நம்பிக்கையில் வாழும் நாயகன். நட்புக்காக எதையும் செய்யும் நண்பர்கள். இவங்களை சுற்றிதான் கதை.