Kalaignarin Por Muzhakkam

Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.

LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE

About The Book

துறைமுகத் தொகுதியில் கழக வேட்பாளராக நின்று வெற்றி வாகை சூடிய நண்பர் செல்வராஜ் அவர்களைப் பாராட்டுகிற வகையில் இந்தப் பொதுக்கூட்டம் இங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான் கட்டிய வள்ளுவர் கோட்டத்திலே நான் இதுவரையில் நுழைய முடியாவிட்டாலும் அந்தக் குறையைப் போக்குகிற வகையிலே இங்கே மின் விளக்குகளால் ஒரு வள்ளுவர் கோட்டத்தை அமைத்து அதில் நின்று பேசுகிற வாய்ப்பினை நல்கிய இந்த வட்டாரத்துக் கழக நண்பர்களுக்கு நான் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்ள பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்

வள்ளுவர் கோட்டமே கூட தேவைதானா? என்று கேட்ட தமிழ்ப்பற்று மிக்கவர்களெல்லாம் நம்முடைய நாட்டிலே இருக்கின்றார்கள்.

ஒரு முறை ரஷ்ய நாட்டின் பிரதமராக இருந்த குருஷேவ் இந்தியத் திருநாட்டுக்கு வருகை தந்தபோது பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்து விட்டு ஆங்காங்குள்ள தொழிற் சாலைகள் தொழில் வளங்கள் இவைகளையெல்லாம் பாராட்டிவிட்டுஇந்தயாவிலே தொழில் வளத்தைப் பெருக்க ரஷ்ய நாடு இன்னும் எவ்வளவோ செய்யத் தயாராக இருக்கிறது என்ற உறுதிமொழியை அளித்துவிட்டு ஆக்ராவிலே இருக்கிற தாஜ்மகாலைப் பார்வையிட்டார்.

தாஜ்மகாலைப் பார்வையிட்ட பிறகு அவரைப் பார்த்து பத்திரிகை நிருபர்கள் இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?என்று கேட்டார்கள். அப்போது குருஷேவ்- கலையுள்ளம் சிறிதுமில்லாத அந்த மனிதர் - Criminal 'Wasteஎன்று சென்னார்.

தாஜ்மகால் கட்டப்பட்டது ஒரு வீண் விரயம் தேவை யற்ற செலவு குற்றம் சாட்டப்படக்கூடிய அளவுக்குச்செய்யப் பட்ட ஒரு செலவு என்ற வகையில் அன்று தனது கருத்தை வெளியிட்டார்.

Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Fast Delivery
Fast Delivery
Sustainably Printed
Sustainably Printed
downArrow

Details