ஓர் இலக்கியம் காலத்தை வென்று வாழ்வதற்குக் காரணம் அதன் கவிதைப் பண்பு என்று கூறுவர். இலக்கியத்தின் பாடு பொருளும் நோக்கமும் காரணங்கள்தாம். என்றாலும் இவற்றையும் தாண்டிக் கவிதைப் பண்புகள் தலைமைக் காரணங்கள் ஆகின்றன. கம்பராமாயணம் காலம் கடந்து வாழ்வதற்குக் கதை மட்டுமே காரணம் அன்று. அக்கதையைச் சொன்ன விதமும் காரணம் ஆகும். கவிதைப் பண்பு சிறக்க அமைவதற்குத் தேர்ந்த சொல்லாட்சி ஒரு காரணம். இனிய ஓசை நயம் இன்னொரு காரணம். வளமான கற்பனை பிறிதொரு காரணம். கற்பனை விரியும் வருணனைகள் உவமைகள் உணர்ச்சிகள் கவிதையைச் சிறக்கச் செய்யும். செய்யுளுக்கு உரிய அணிநலன்கள் கவிதைக்கு மெருகு சேர்க்கும். இவை யாவும் கம்பரின் கவிதையில் உண்டு. எனவே தான் கம்பர் கவித்திறன் கற்றவரால் பாராட்டப் பெறுகிறது.
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.